​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

Published : Jan 01, 2020 6:27 PM

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

Jan 01, 2020 6:27 PM

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தார்.

இது தொடர்பாக முருகன் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, முருகனுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.