​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக். அமைப்புடன் தொடர்பு

Published : Jan 01, 2020 6:24 PM

கோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக். அமைப்புடன் தொடர்பு

Jan 01, 2020 6:24 PM

சென்னையில் கோலம் போட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் அமைப்பில் தொடர்பில் இருப்பதால், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை பெசன்ட் நகரில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியதாக காயத்திரி கந்தாதே உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்திரி கந்தாதே, பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.