ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அந்நாட்டின் நியூ சௌத் வேல்ஸில் உள்ள பேட்ஸ்மேன் பேயில் இருந்து விக்டோரியா வரை இரண்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் எரியும் காட்டுத் தீயால் பல இடங்களில் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நான்கு பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விக்டோரியா மாநிலத்தின் கடற்கரையோரம் மற்றும் கப்பலில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.