மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறப்பு
Published : Jan 01, 2020 6:19 PM
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் பாசனத்திற்கான வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு வழக்கம் போல 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 118.63 அடியாக உள்ளது.