முக்கிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டிசம்பர் மாதம் ஒரளவு வளர்ச்சியுடன் தனது வருடாந்திர விற்பனையை முடித்துக் கொண்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் கடந்த ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 735 வாகனங்களை மாருதி நிறுவனம் விற்றுள்ளது. மாருதியின் நடுத்தர ரக கார்களான சுவிஃப்ட்(Swift) டிசைர்(Dzire) பலினோ (Baleno) போன்றவற்றின் விற்பனை 27.9 சதவிகிதம் அதிகரித்த போதிலும், துவக்க நிலை காரான ஆல்ட்டோ மற்றும் எஸ்.பிரஸ்ஸொ ஆகியவற்றின் விற்பனை 13 புள்ளி 6 சதவிகிதம் குறைந்துள்ளது.
மாருதியின் ஆடம்பரகாராக கருதப்படும் சியாஸ் விற்பனை 62 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து, மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அதே சமயம் மாருதியின் ஏற்றுமதி கடந்த ஆண்டு 10 புள்ளி 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் விலை உயர வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாக வாகன விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.