​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள்.. வாகனங்கள் பறிமுதல் - போலீசாருடன் வாக்குவாதம்

Published : Jan 01, 2020 4:15 PM

பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள்.. வாகனங்கள் பறிமுதல் - போலீசாருடன் வாக்குவாதம்

Jan 01, 2020 4:15 PM

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்த போலீசாருடன், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அண்ணாசாலை சாந்தி திரையரங்கம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த 10-க்கும் மேற்பட்ட பைக்குகளை மடக்கிப்பிடித்த போக்குவரத்து போலீசாருக்கும், பைக் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.