அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் பரிமாறிக் கொண்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே, அணுசக்தி நிலையங்களை தாக்குவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 1991ம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி, அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை இரு நாடும் பரிமாறிக் கொள்ளும். இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு பாகிஸ்தானுக்கு வழங்கும்.
இதேபோல, பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவலை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வழங்கும். 29ஆண்டாக தற்போது அணுசக்தி நிலையங்கள் பட்டியலை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளன.