பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில் புழுதி பறக்க ஓடிய நூற்றுகணக்கான குதிரைகள்
Published : Jan 01, 2020 3:54 PM
பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில் புழுதி பறக்க ஓடிய நூற்றுகணக்கான குதிரைகள்
Jan 01, 2020 3:54 PM
சீனாவின் பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில், நூற்றுக்கணக்கான குதிரைகள் ஓடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள, யிலி குதிரை வளர்ப்பு தளத்தின் ஒரு சுற்றுலா திட்டம் இதுவாகும். ஆரம்ப கட்டத்தில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, காலப்போக்கில் சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறி போனது.
முழுவதும் வெண்பனி போர்த்திய மலைபகுதியில் புழுதி பறக்க, குதிரைகள் ஆர்பரித்து ஓடியது போர்க்கள காட்சிகளை போன்று தோன்றுகிறது.