நெல்லையில் 3 நாட்கள் பறவைகள் திருவிழாவும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
தாமிரபரணி பாசனக் குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்த பறவைகளை இனம், ரகம் வாரியாக பிரித்து கணக்கெடுக்கின்றனர். நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான் உள்ளிட்ட 36 வகை பறவைகள் வந்து தங்கியுள்ளன. அவற்றை மக்கள் கண்டு களிக்க 3 நாட்கள் பறவைகள் திருவிழா தொடங்கியுள்ளது. நெல்லை வேய்ந்தன் குளத்தில் மக்கள் பறவைகளை கண்டு களிக்க தொலைநோக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.