​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீப்பிழம்புகளைக் கக்கும் புதர்த்தீக்கு இடையே சிக்கிய வீரர்கள்

Published : Jan 01, 2020 1:13 PM

தீப்பிழம்புகளைக் கக்கும் புதர்த்தீக்கு இடையே சிக்கிய வீரர்கள்

Jan 01, 2020 1:13 PM

தீப்பிழம்புகளைக் கக்கும் புதர்த் தீயிக்கு இடையே ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் சென்ற வாகனம் சிக்கிக்கொண்டதன் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சிட்னியில் இருந்து 160 கிலோ மீட்டருக்கு தெற்கே உள்ள நவ்ராவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களின் வாகனம் புதர்த் தீயில் சிக்கிக்கொண்டது. தீ சுழன்று அடிக்க, தீப்பொறிகள் சுற்றிலும் பறப்பதை வாகனத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களில் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த திகிலூட்டும் சூழலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தாங்கள் உயிர் தப்பியதாகவும் தீயணைப்பு வீரர் தெரிவித்துள்ளார்.