​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமருக்கு முதலமைச்சர் வாழ்த்து

Published : Jan 01, 2020 12:56 PM

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமருக்கு முதலமைச்சர் வாழ்த்து

Jan 01, 2020 12:56 PM

 குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பூங்கொத்துகளுடன் அவர் வாழ்த்துக் கடிதங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்து நாட்டுக்கு சிறப்பான சேவையாற்ற ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மகத்தான தலைமையில் நாடு வளம் மற்றும் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து வீறு நடைபோட வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.