புதுச்சேரியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது. திருத்தணியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவலங்காடு, கனகம்மா சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், முடிச்சூர், கேம்ப் ரோடு, மாடம்பாக்கம், செம்பாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய பகுதியில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் புத்தாண்டை சுற்றுலா தளங்களுக்கு சென்று கொண்டாட இருந்த மக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.