குடும்பத்துடனும் நண்பர்களுடனும் புத்தாண்டை வரவேற்ற சுற்றுலாப் பயணிகள்
Published : Jan 01, 2020 11:26 AM
குடும்பத்துடனும் நண்பர்களுடனும் புத்தாண்டை வரவேற்ற சுற்றுலாப் பயணிகள்
Jan 01, 2020 11:26 AM
உதகையில் குவிந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இணைந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும் விடுமுறையை கழிப்பதற்காகவும் குவிந்த சுற்றுலாப்பயணிகளால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்கள் நிரம்பி வழிந்தன.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டும் ரம்மியமான இயற்கை காட்சிகளின் பின்புலத்தில் புகைப்படம் எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.