2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு
Published : Jan 01, 2020 10:41 AM
ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
தங்கச்சியம்மாபட்டி அருகே ஒட்டன்சத்திரம்-கோவை 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் இருபுறமும் செல்லும் வாகனங்கள், ஒரே பாதையில் அனுமதிக்கப்பட்டுகின்றன.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் ஐஸ்கீரிம் லோடு இறக்கிவிட்டு கோயம்புத்தூர் சென்ற லாரியும், கோயம்புத்தூரில் இருந்து நாகர் கோவில் சென்ற லாரியும் ஓட்டுநர்கள் கவனக்குறைவால் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர்கள் பிரபாகரன், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அஜித் குமார் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அம்பிளிக்கை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.