​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை

Published : Jan 01, 2020 9:56 AM

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை

Jan 01, 2020 9:56 AM

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதால், பவானி ஆற்றில் விநாடிக்கு 3,100 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

105 அடி உயரமுள்ள அந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 27ம் தேதி நிறுத்தப்பட்டது. எனவே அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து மீண்டும் நேற்றிரவு முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.

இதையடுத்து அணையிலிருந்து பவானி ஆற்றில் கீழ்மதகுகள் வழியாக விநாடிக்கு 3100 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சி யாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3068 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் திறப்பின் அளவு மாறுபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.