புத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, புழல், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்து 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஜனவரி மாதம், பொதுவான மழை அளவு 26 மில்லி மீட்டர். ஆனால் இந்த அளவு மழையை வருடத்தின் முதல் நாளிலேயே சென்னை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 9ம் தேதி வரை சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டு தான் இருக்கும் என்றும், இந்த மாதத்தின் கடைசி வாரமும் சென்னயில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.