புத்தாண்டு தினத்தையொட்டி, வடமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புத்தாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாண்டு தினத்தையொட்டி, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வாரணாசியில், கங்கை நதிக்கரையில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் ஆலயத்தில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.