தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழைப் போல ஆங்கிலத்திலும் சரளமாக பேச தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படும் என்றார்