முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் இன்று பதவியேற்கிறார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
முப்படை தலைமை தளபதியாக இன்று பதவியேற்கும் பிபின் ராவத்துக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பரஸ்பர ராணுவ உறவுகளை மேம்படுத்த, புதிய பதவி உதவும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராவத், பாகிஸ்தான் மற்றும் சீனா என இரு எல்லைகளிலும் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், எந்த சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் முழு வலிமையுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.