​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை

Published : Jan 01, 2020 6:50 AM

புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை

Jan 01, 2020 6:50 AM

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் நேற்றிரவு ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் நேற்றிரவு 9 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காவல்துறையினர்தடத்திய தீவிர வாகன சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. யாரும் அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

மூன்று இணை ஆணையர்கள் உட்பட 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்க குதிரைப்படை வீரர்களுடன், மணலில் ஓடும் வாகனங்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. நான்கு ட்ரோன் கண்காணிப்பு கேமராக்களும் சிசிடிவி கேமராக்களும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான பயன்படுத்தப்பட்டன .

மெரீனா கடற்கரையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவதோடு பாதுகாப்பாக வீடு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மதுரவாயல், பூந்தமல்லி ,போரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். அதுபோல் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் முட்டுக்காடு படகு குழாம் அருகே கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர். இந்த நிகழ்வில் ஏராளமான போலீசாருடன் பொதுமக்களும் பங்கேற்றனர்.

பின்னர் மாமல்லபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என சோதனையிட்ட பின்னரே வாகன ஓட்டிகளை அனுப்பிவைத்தனர்.