தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64 சதவிகிதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 28 சதவிகிதம் குறைவாகவும் மழை பெய்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.