​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்ய விமான நிலையத்தில் பயணிகளுக்கு Dog Theropy

Published : Jan 01, 2020 3:49 AM

ரஷ்ய விமான நிலையத்தில் பயணிகளுக்கு Dog Theropy

Jan 01, 2020 3:49 AM

ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான நிலையத்தில் பயணத்திற்கு செல்வதற்கு முன்பு பயணிகளின் மன நிலையை சீராக்கும் வகையில் அவர்களுக்கு டாக் தெரபி (dog theropy) வழங்கப்படுகிறது.

டொமோடெடோவோ (Domodedovo) விமான நிலையம் 'யுனைடெட் அனிமல் தெரபிஸ்ட்ஸ்' (United Animal Therapists) சங்கத்துடன் இணைந்து, பயணம் செல்லும் முன்பு, பதட்டமாக இருக்கக்கூடியவர்களுக்கு இந்த தெரபி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பயணிகள் இந்த தெரபி மூலம் நாய்களுடன் மகிழ்ந்து விளையாடி புத்துணர்வு கொள்கின்றனர். ரஷ்யாவில் இப்பொழுது தேசிய விடுமுறை தொடங்குவதால் விமான நிலையங்களின் கூடும் பயணிகளின், ஏராளமானோர் நாயுடன் மகிழ்ச்சியோடு விளையாடி செல்கின்றனர்.

United Animal Therapists சங்கம் விலங்குகளை மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் செல்கிறது. மேலும் சிறப்புத் தேவைகளை கொண்ட குழந்தைகளுக்காகவும் இந்த சங்கம் விலங்குகளை பயன்படுத்துகிறது. இந்த குழு குதிரைகள் மற்றும் லாமாக்கள் உள்ளிட்ட பிற விலங்குகளுடன் சிகிச்சை அமர்வுகளையும் ஏற்பாடு செய்கிறது.