​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி கோயிலில் சலுகை விலை லட்டுகளை நிறுத்த முடிவு

Published : Jan 01, 2020 3:39 AM

திருப்பதி கோயிலில் சலுகை விலை லட்டுகளை நிறுத்த முடிவு

Jan 01, 2020 3:39 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இலவச தரிசனத்திலும்,  மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் மட்டும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு  வழங்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சலுகை விலையிலான லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு இலவச லட்டு  வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்தார்.