​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராக்கிங் கொடுமையால் மதுரையில் விஷம் அருந்தி இருவர் தற்கொலை

Published : Mar 16, 2019 12:04 PM

ராக்கிங் கொடுமையால் மதுரையில் விஷம் அருந்தி இருவர் தற்கொலை

Mar 16, 2019 12:04 PM

ராக்கிங் கொடுமையால் மதுரை தியாகராஜா கல்லூரி மாணவர்கள் இருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  

தியாகராஜா கல்லூரியில் பி.ஏ.எகனாமிக்ஸ் முதலமாண்டு பயின்று வந்த முத்துப்பாண்டி, பாரத் என்ற இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரையும் திருப்புவனத்தை சேர்ந்த ஜெயசக்தி உள்ளிட்ட மாணவர்கள் சற்று தரக்குறைவான முறையில் தொடர்ந்து ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

image

இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி முத்துப்பாண்டி, பரத் ஆகியோர் பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பரத் கடந்த 4 நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் முத்துப்பாண்டி இன்று உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன் முத்துப்பாண்டி மருத்துவமனை படுக்கையில் இருந்த படியே தான் ராக்கிங் செய்யப்பட்ட விதம் குறித்து தனது கைப்பட எழுதினார்.

image

முத்துப்பாண்டியின் தாயார் சித்ரா தேவியின் புகாரின் பேரில் ஜெயசக்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.