​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியதாக பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு

Published : Mar 16, 2019 11:57 AM

சென்னையில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியதாக பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு

Mar 16, 2019 11:57 AM

சென்னையில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 6 காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுதல், சுவரில் கட்சிகள் விளம்பரப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றாத கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கருதப்படும்.

அந்த வகையில், விதிகளை மீறி மதில் சுவரில் போஸ்டர் ஒட்டியயதாக பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது ராயலா நகர், கேகே நகர், எம்ஜிஆர் நகர்,  மாம்பலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.