​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியர்களின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான்..!

Published : Mar 16, 2019 7:36 AM

இந்தியர்களின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான்..!

Mar 16, 2019 7:36 AM

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் வந்து செல்வதற்கான சுதந்திர வெளியாக எல்லையைத் திறந்து விட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது.

தினசரி 5 ஆயிரம் பக்தர்களும் விசேஷமான நாட்களில் 15 ஆயிரம் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், தினசரி 500 பக்தர்கள் மட்டுமே  15 பேர் கொண்ட குழுவாக அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி எல்லையில் நடத்திய பேச்சுவார்த்தையில்,கர்த்தார்பூர் செல்ல விசா இல்லாமல் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதே நேரத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.