​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா - பாக்., எல்லையில் நள்ளிரவில் பயங்கர ஓசைகளால் அச்சப்படும் பொதுமக்கள்

Published : Mar 16, 2019 6:58 AM

இந்தியா - பாக்., எல்லையில் நள்ளிரவில் பயங்கர ஓசைகளால் அச்சப்படும் பொதுமக்கள்

Mar 16, 2019 6:58 AM

இந்தியா பாகிஸ்தான் எல்லை நகரான அமிர்தசரஸில் நள்ளிரவு வேளையில் பெரும் இடிபோன்ற ஓசைகள் கேட்டதாக உள்ளூர் மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

அதிகாலையில் காதை பிளக்கும் ஓசைகள்:

அதிர்வு காரணமாக சில வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறி விழுந்ததால் பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியதாக வதந்திகள் பரவின. ஜெட் போர் விமானங்கள் தாழப்பறந்து சென்றதாகவும், வானில் காதைப் பிளக்கும் ஓசையை எழுப்பிச் சென்றதாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இந்த ஓசைகள் வெள்ளிக்கிழமை காலை 1 மணிக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

காவல்துறை விளக்கம்:

பாகிஸ்தான் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியதாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்திய விமானப் படையின் சூப்பர்சானிக் போர் விமானங்களின் ஓசைதான் என்றும், ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய இத்தகைய விமானங்களால் காற்றில் அதிர்வுகள் ஏற்பட்டு பெரும் ஓசைகள் எழும்பும் எனவும் விளக்கம் அளித்துள்ளது பஞ்சாப் மாநில காவல்துறை, இந்திய ஜெட் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த ஓசைகளால் டிவிட்டரில் அமிர்தசரஸ் டிரண்டிங் ஆனது.