​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டத்தில் ரூ.1.27 கோடி மோசடி பெண் உட்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Published : Mar 15, 2019 9:46 PM

அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டத்தில் ரூ.1.27 கோடி மோசடி பெண் உட்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Mar 15, 2019 9:46 PM

அஞ்சல்துறை சிறுசேமிப்பு திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த ஒரு பெண் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதித்து - மதுரை மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியிலுள்ள தபால் அலுவலங்களில் அரசு மென்பொருளை தவறாக பயன்படுத்தி சுமார் 1.27 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக தபால் மாஸ்டர் வரதராஜன்,உதவியாளர் முருகேசன் கார்த்திகா என்ற பெண் ஆகியோரை சிபிஐ கைது செய்து விசாரித்து வந்தது.

மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.