​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்களின் ஆவணங்களை முறையாக பராமரிக்காதது தொடர்பாக ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

Published : Mar 15, 2019 7:53 PM

கோவில்களின் ஆவணங்களை முறையாக பராமரிக்காதது தொடர்பாக ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

Mar 15, 2019 7:53 PM

திருவண்ணாமலை 49 கோவில்களின் ஆவணங்களை முறையாக பராமரிக்காதது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்த பக்த மார்க்கண்டேய கோவிலை இடித்து காபி ஷாப் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறிக்கை தாக்கல் செய்த நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையர் குமரன், திருவண்ணாமலையில் உள்ள 49 கோவில்களின் ஆவணங்களும் முறையே பராமரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.