​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் குழந்தைபெறும் சம்பவங்கள் அதிகரிப்பு

Published : Mar 15, 2019 7:43 PM

கேரளாவில் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் குழந்தைபெறும் சம்பவங்கள் அதிகரிப்பு

Mar 15, 2019 7:43 PM

கேரளாவில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி குழந்தைப்பெற்ற 22,552 பெண்கள் 19 வயதுக்குட்பட்ட யுவதிகள் என தெரியவந்துள்ளது.

கேரள அரசின் மாநில பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை அண்மையில் வெளியிட்ட இந்த புள்ளிவிபரத்தில் 2017ம் ஆண்டின் படி கேரளாவில் பிறப்பு விகிதத்தில் 4.48% குழந்தைகளுக்கு 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அம்மாவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கிராமங்களை விடவும் நகரங்களில் தான் 19 வயதுக்குட்பட்ட தாய்மார்கள் அதிகம் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதன்படி நகரத்தில் 16,639 பெண்களும், கிராமத்தில் 5,913 பெண்களும் 19 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல கிராமப்புறங்களில் உள்ள 19 வயதுக்குட்பட்ட 137 பெண்கள் இரண்டு குழந்தையையும், 48 பெண்கள் 3 குழந்தைகளையும், 37 பெண்கள் 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் கேரள அரசு, மலப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுவதை அறிய முடிவதாக கூறியிருக்கிறது.