​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக கூட்டணியில் போட்டியிடும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார்?

Published : Mar 15, 2019 7:07 PM

திமுக கூட்டணியில் போட்டியிடும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார்?

Mar 15, 2019 7:07 PM

திமுக கூட்டணியில் போட்டியிடும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் யாராக இருக்கக் கூடும் என்ற உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தி களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தனி தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தனி தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் இந்நிய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கட்சிகள் விரைவில் தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி ஒதுக்கப் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் ஓரிரு நாளில் தங்களது வேட்பாளர் யார் என அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.