​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தகராறு செய்த ரவுடி

Published : Mar 15, 2019 4:14 PM

கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு தகராறு செய்த ரவுடி

Mar 15, 2019 4:14 PM

கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையில் சிறப்பு உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருமாநில எல்லைப் பகுதியான இளஞ்சிறையிலுள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் என்பவன் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அவ்வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், ராஜ்குமாரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து வில்சனின் கழுத்து மற்றும் கையில் வெட்டிவிட்டு ராஜ்குமார் தப்ப முயன்றுள்ளான்.

அவனை சுற்றியிருந்த மக்கள் துரத்திப் பிடித்து பளுகல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.