​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விபத்தில் சிக்கிய விமானங்களின் வால் பகுதி ஸ்டெபிளைசர் அசாதாரண நிலையில் இருந்ததாக தகவல்

Published : Mar 15, 2019 3:55 PM

விபத்தில் சிக்கிய விமானங்களின் வால் பகுதி ஸ்டெபிளைசர் அசாதாரண நிலையில் இருந்ததாக தகவல்

Mar 15, 2019 3:55 PM

விபத்துக்குள்ளான எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் வால் பகுதியை இயக்கும் ஸ்டெபிளைசர் பாகம் ஒன்று, முன்பு விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தில் இருந்தது போன்றே அசாதாரண நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் போயிங் 737 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த லயன் ஏர் விமானம் விபத்தில் சிக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.

அதில் கிடைத்த விமானத்தின் பின்பகுதி பாகத்தின் கிடைமட்ட வால் பகுதியை இயக்கும் ஸ்டெபிளைசர் பாகம் அசாதாரண நிலையில் இருந்தது. இந்நிலையில் எத்தியோபியாவில் 157 பேரின் உயிரைப் பறித்த அதே ரக விமானத்தில் பின்பகுதி பாகத்தில் உள்ள கிடைமட்ட வால் பகுதியை இயக்கும் ஸ்டெபிளைசர் அதேபோன்ற நிலையில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோஸ் டவுன் எனும் விமானத்தின் முகப்பு பாகம் சற்று கீழிறங்கியபடி விமானம் கீழ்நோக்கி வந்ததா? அல்லது கவிழ்ந்தபடி வந்ததா என கண்டறிய இந்த ஆய்வு உதவும் எனக் கூறப்படுகிறது.