​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

Published : Mar 15, 2019 3:13 PM

மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

Mar 15, 2019 3:13 PM

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்சோர்டியம் ஆப் அக்ரடீடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்துடன், மருத்துவ கல்வி இயக்குநரகம் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பல்வேறு துறை தலைவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, நோயாளிகளின் பாதுகாப்பு, தர கட்டுப்பாட்டை எப்படி மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டால், தீயணைப்பு கருவியை பயன்படுத்தி எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் குறும்படம் திரையிடப்பட்டது. 

நவீன கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி நாளை மற்றும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.