​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை

Published : Mar 15, 2019 2:43 PM

மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை

Mar 15, 2019 2:43 PM

பொள்ளாச்சி ஜெயராமனின் புகாரின் பேரில் அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று இன்று நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவில்லை.

பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்கார விவகாரம் தொடர்பான நக்கீரன் தளத்தில் வெளியான செய்தியில் தனக்குத் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தார்.

புகார் மத்தியக் குற்றப்பிரிவின் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான சம்மனை ஏற்று நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை. மாறாக அவரது தரப்பு வழக்கறிஞர் சிவகுமார் உள்ளிட்டோர் எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

நக்கீரன் கோபால் மீது  எவ்வித வழக்கும் பதியவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பினால் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு ஏற்கெனவே சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் நிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு தேவையில்லாமல் புதிய வழக்கை பதிவு செய்வது சட்டவிரோதமானது எனவும் கூறினர்.