​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

Published : Mar 15, 2019 1:43 PM

இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

Mar 15, 2019 1:43 PM

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிச்சந்தல் பேருந்து நிலையம் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்தது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டியின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தற்போது மேலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.