​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published : Mar 15, 2019 1:36 PM

மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mar 15, 2019 1:36 PM

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி ஒதுக்கீடு விவரங்களை அறிவித்தார்.

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.