​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டம்

Published : Mar 15, 2019 10:47 AM

சென்னையில் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டம்

Mar 15, 2019 10:47 AM

சென்னை பெரியமேட்டில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரிய மேட்டில் மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு புதிய கட்டிடத்துக்கு நிதி என்ற பெயரில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் எதிர்ப்புப் பதாகைகளுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.