​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கை அருகே தந்தையின் 2வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published : Mar 15, 2019 10:39 AM

சிவகங்கை அருகே தந்தையின் 2வது மனைவி, மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Mar 15, 2019 10:39 AM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சொத்து தகராறு காரணமாக தந்தையின் 2வது மனைவி மற்றும் மகனை, வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய முதல் மனைவியின் மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்மச்சி ஊரணியை சேர்ந்த சுப்புராமன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது 2வது மனைவி பழனிமுத்து மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர், நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சுப்புராமனின் முதல் மனைவியின் மகனான பாலசுந்தரம் என்பவர், அதிகாலை 5 மணி அளவில் வீடு புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பழனிமுத்து மற்றும் மனோஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. பாலசுந்தரத்தை பிடித்து விசாரணை நடத்தி வரும் தேவகோட்டை போலீசார், சொத்து தகராறு காரணமாக கொலை முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளனர்.