​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய், மகளின் உடல்கள் மீட்பு

Published : Mar 15, 2019 10:18 AM

சென்னையில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய், மகளின் உடல்கள் மீட்பு

Mar 15, 2019 10:18 AM

சென்னை கொளத்தூரில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி. 15 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த இவர், பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய மகள் ஷர்மிளாவுடன் அடுக்குமாடி வாடகைக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

மாலதியின் மகன் பெங்களூரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் மன அழுத்தம் காரணமாக 3 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்திற்கு ஆண் துணை இல்லாத சோகத்திலும், எதிர்காலம் குறித்த அச்சத்திலும் இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களின் வீட்டுக் கதவு 3 நாட்களாகத் திறக்கப்படாத நிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், அழுகிய நிலையில் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.