​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா, ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகள் செல்லத் தொடங்கினர்

Published : Mar 15, 2019 9:46 AM

கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா, ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகள் செல்லத் தொடங்கினர்

Mar 15, 2019 9:46 AM

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பயணத்தைத் தொடங்கினர்.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மற்றும் ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத் தந்தை உள்ளிட்டோரால் கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழா தொடங்குகிறது. இன்று அதிகாலை முதலே ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் பயணிகள் செல்லத் தொடங்கியுள்ளனர். 65 விசைப்படகுகள், 15 நாட்டுப் படகுகள் மூலம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 2 ஆயிரத்து 451 பேர் கச்சத் தீவு திருவிழாவுக்குச் செல்கின்றனர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர சோதனைக்குப்பின் கடலோரகாவல் படையினரின் பாதுகாப்போடு அவர்கள் கச்சத் தீவுக்குச் செல்கின்றனர். விழா முடிந்த பின் தமிழகத்தில் இருந்து சென்ற பயணிகள் இலங்கை கடற்படை பாதுகாப்புடன் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேருவார்கள்