​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகரின் முக்கியப் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை

Published : Mar 15, 2019 8:25 AM

நகரின் முக்கியப் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை

Mar 15, 2019 8:25 AM

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் விடிய விடிய வாகனச் சோதனை நடைபெற்றது.

தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க மாநில மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் நேற்றிரவு கிண்டி, பழைய மகாபலிபுரம் சாலை, கோட்டூர்புரம், அடையாறு, தண்டையார்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையிலும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனே, திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் ஜே.அன்பழகன் அலுவலகம், மைலாப்பூர் தொகுதி சட்டப்பேரவை  உறுப்பினர் நடராஜன் அலுவலகம் உள்ளிட்டவை மூடி சீல் வைக்கப்பட்டன.