​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு, ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல்

Published : Mar 15, 2019 8:17 AM

சாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு, ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல்

Mar 15, 2019 8:17 AM

ஈரோடு அருகே சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் பலியானதை தொடர்ந்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஈரோடு அருகேயுள்ள மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த தனபால் தனது 4 வயது மகன் சபரியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சித்தோடு அருகே கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையினை கடக்க முயற்சித்த போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் தனபால் மற்றும் சபரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து நடைபெறும் சாலை விபத்திற்கு தீர்வுகாண வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சம்பந்தப்பட்ட பகுதியில் ஒளிரும் விளக்குகள் அமைப்பதாக போலீசார் அளித்த உறுதியினை தொடர்ந்து 4 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.இதன் காரணமாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனையடுத்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.