​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

Published : Mar 15, 2019 7:50 AM

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

Mar 15, 2019 7:50 AM

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இரும்பு தடுப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்துவருகின்றன.

புகழ்பெற்ற இந்த கோயிலில் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான குண்டம் நிகழ்வில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்தும் பக்தர்கள் தீ மிதிப்பார்கள். இதனையொட்டி அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

இதுவரை சவுக்கு குச்சிகளாலேயே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக இரும்பால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஒரு லட்சம் சதுர அடியில் தீப்பிடிக்காத பந்தல் அமைக்கும் பணி மற்றும் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்துவருகின்றன.