​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரட்டை இலை வழக்கு - இன்று விசாரணை

Published : Mar 15, 2019 7:11 AM

இரட்டை இலை வழக்கு - இன்று விசாரணை

Mar 15, 2019 7:11 AM

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையிட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது.

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகியது. அந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.