​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

Published : Mar 15, 2019 7:04 AM

திருப்பூரில் திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

Mar 15, 2019 7:04 AM

திருப்பூரில் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் தொல்லை தந்த நபரை, போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவியிடம் தனக்கு திருமணமானதை மறைத்த அவர், திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தினேசை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.