​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

Published : Mar 15, 2019 6:44 AM

தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

Mar 15, 2019 6:44 AM

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ கலந்துக் கொண்டார். சுமார் 1800 தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பாதுகாப்பை அளிக்கும் காவல்துறை, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் செலவுகளை கண்காணிப்பவர்கள் என பலதரப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேர்தலில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. தேர்தலில் தவறுகள் நிகழாத வண்ணம் பார்வையாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்று சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளார்.