​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை

Published : Mar 15, 2019 6:21 AM

சேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை

Mar 15, 2019 6:21 AM

தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 17 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகராட்சி பகுதியில்  உள்ள தாதகாப்பட்டி மற்றும் அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்று  வருவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து இந்த கும்பலை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நேற்றிரவு சேலம் தாதகாப்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதற்காக வீடு வாடகை எடுத்து தங்கி இருந்த 17 பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 980 கேரளா லாட்டரி சீட்டுகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.