​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தலில் "கிங் மேக்கராக" மாற காய் நகர்த்தும் மம்தா..!

Published : Mar 14, 2019 8:45 PM

மக்களவைத் தேர்தலில் "கிங் மேக்கராக" மாற காய் நகர்த்தும் மம்தா..!

Mar 14, 2019 8:45 PM

வரும் தேர்தலில் கிங் மேக்கராக ஆசைப்படும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக, அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும், தனித்தே வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மம்தா பானர்ஜி, தற்போது உள்ள 34 எம்.பிக்களில் பலரையும் கழற்றி விட்டுள்ளார். புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ள மம்தா பானர்ஜி, ஏற்கனவே எம்.பிக்களாக இருப்பவர்களை புதிய தொகுதிகளில் போட்டியிட வைத்துள்ளார்.

இதன்மூலம், எம்.பிக்கள் மீதான, தனது அரசின் மீதான அதிருப்திகளை மடைமாற்ற முடியும் என மம்தா பானர்ஜி நம்புவதாக கூறப்படுகிறது. மகளிருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மொத்த வேட்பாளர்களில் 40 விழுக்காடு அளவிற்கு, பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

பாஜக பலம் உள்ள தொகுதிகளில், திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை மம்தா நிறுத்தியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மீதான தனது எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில், மாயாவதி, அல்லது அகிலேஷ் அழைத்தால், வாரணாசியில் பரப்புரை மேற்கொள்ளவும் தயார் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.