​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில், குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்

Published : Mar 14, 2019 7:46 PM

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில், குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்

Mar 14, 2019 7:46 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் சரி எப்படிப்பட்ட அதிகார மைய்யதோடு தொடர்புடையவர்களாக இருந்தாலும் சரி பாரட்சம் பார்க்காமல் கைது செய்யவேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்ற நிலையில் பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல் துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர், ஆனால் முக்கிய குற்றவாளியான பார் நாகராஜ் வீட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.